| ADDED : ஏப் 26, 2024 11:47 PM
பொள்ளாச்சி:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் 'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' திட்டத்தில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்படுகின்றன.பராமரிப்பு செலவுக்கான மொத்த செலவில், 50 சதவீதம் அரசாலும், 50 சதவீதம் சங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். கோவை கோட்டத்தில், 17 ஆயிரத்து, 830 குடியிருப்புகள் உள்ளன.இதுவரை, 25க்கும் மேற்பட்ட சங்கங்கள் கோவை கோட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வாரிய குடியிருப்புகளை சிறப்பாக பராமரிக்கும் குடியிருப்போர் சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் மூன்று நிலைகளில் சிறப்பாக செயல்படும் சங்கங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், 50 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் என, மூன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளன. சந்தா வசூல், வாரிய துாய்மை, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் சிறந்த சங்கங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன.கோவை கோட்ட வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில்,'சென்னையில் இருந்து வாரிய அதிகாரிகள் அடங்கிய குழு, பரிசுக்கு விண்ணப்பித்த வாரிய குடியிருப்புகளில் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும்' என்றார்.