உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரமில்லாத ரோடு: பொதுமக்கள் புகார்

தரமில்லாத ரோடு: பொதுமக்கள் புகார்

சூலூர்;சூலூர் அடுத்த பீடம் பள்ளி ஊராட்சியில், பீடம் பள்ளி பஸ் ஸ்டாப்பில் இருந்து நடுப்பாளையம் வரை தார் ரோடு போடும் பணி நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டில், தரமற்ற முறையில் ரோடு போடப்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.பொதுமக்கள் கூறுகையில், 'பஸ் ஸ்டாப் அருகில் போடப்பட்ட ரோட்டில், தாரின் அளவு குறைவாக உள்ளது. கற்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், மணல் போல் உள்ளது. ஒரு மழை பெய்தால் கூட ரோடு சேதமடைந்து விடும். தரமாக ரோடு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர், தார் கலவையை ஆய்வு செய்தனர். 'தரமான ரோடு போட நடவடிக்கை எடுப்பதாக' பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்