உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை பாதிப்பு கண்காணிப்பு ; ஒன்றிய அதிகாரிகள் முனைப்பு  

மழை பாதிப்பு கண்காணிப்பு ; ஒன்றிய அதிகாரிகள் முனைப்பு  

பொள்ளாச்சி;கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே, கடந்த வாரம் பெய்த கனமழையால், ஆங்காங்கே உள்ள குளங்களுக்கு நீர்வரத்து இருந்தது. அதேநேரம், தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.இந்நிலையில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மழை பாதிப்பு ஏற்பட்டால் துரிதமாக சீரமைப்பு பணி மேற்கொள்ள அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். பாதிப்புகளை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஒன்றிய பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஊராட்சித் தலைவர்கள் வாயிலாக அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.அதேநேரம், கோடையில் பெய்த கனமழையால், ஊராட்சிகளில், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை