| ADDED : ஜூன் 20, 2024 05:08 AM
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டில் இருந்து, எஸ்.எம்.பி., நகர் செல்லும் ரோட்டின் அருகே வேகத்தடை அமைக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள சர்வீஸ் ரோட்டில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வேகமாக பயணிக்கின்றன. இந்த ரோட்டில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே, எஸ்.எம்.பி., நகர் குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்த ரோட்டின் வழியாகவே சென்று வருகின்றனர்.எஸ்.எம்.பி., நகர் ரோடு மேடாக உள்ளதால், இங்கிருந்து சர்வீஸ் ரோட்டிற்கு பைக் மற்றும் கார் போன்ற வாகனங்களில் வருபவர்கள், மேடான பகுதியில் ஏறி சர்வீஸ் ரோட்டிற்கு வர சிரமப்படுகின்றனர்.மேலும், சர்வீஸ் ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் இப்பகுதியில் விபத்து நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, இப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.