உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

வால்பாறை : வால்பாறையில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில் மழை பெய்யும் நிலையில், பகல் நேரத்தில் பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மக்கள் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.இந்நிலையில், சுகாதாரத்துறை சார்பில் வால்பாறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். நகராட்சி சார்பில், பள்ளிகளில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும். நகரில் கொசு மருந்து அடிப்பதோடு, வீடு மற்றும் நடைபாதைகளில் பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும். சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ