உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம் : பழநியில் நடக்கும், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு, சிறப்பு ரயில்கள் இயக்க, ரயில் நல பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.முருகப் பெருமானின் பெருமையை, உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை, இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. இதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் கோவை, தஞ்சாவூர், மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே, சேலம் கோட்ட மேலாளருக்கு ரயில் நல பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து ரயில் நல பயணிகள் சங்கம் (கோவை, திருப்பூர், திண்டுக்கல்) மாவட்டங்களின் ஒருங்கிணைந்த செயலாளர் மோகன் கூறுகையில், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக பழனிக்கும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி வழியாக பழனிக்கும், மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கும் ரயில் இயக்க வேண்டும். பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் இந்த சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பல்வேறு புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பழநிக்கு வருவார்கள். அவர்களுக்கு கோவையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் பயன் உள்ளதாக இருக்கும், என்றார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை