உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழையால் கொசுத்தொல்லை: மருந்து தெளிக்க வேண்டுகோள்

மழையால் கொசுத்தொல்லை: மருந்து தெளிக்க வேண்டுகோள்

வால்பாறை;மழையால் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுவதால், நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. வால்பாறை நகரில் மழை நீருடன், கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.குறிப்பாக, கக்கன்காலனி, சிறுவர்பூங்கா, கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், இரவில் துாங்க கூட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இதனிடையே, வால்பாறையில் பெய்யும் பருவமழையால் மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.மக்கள் கூறியதாவது:வால்பாறை நகரில், பருவமழை இடைவிடாது பெய்கிறது. பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளதால், மழை காலத்தில் மழை நீருடன், சாக்கடை கழிவுநீரும் வீட்டிற்குள் புகுந்துவிடுகிறது.குடியிருப்பு பகுதியை சுற்றிலும் சாக்கடை நீர் ஓடுவதால், கொசு உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. மக்கள் நடந்து செல்லும் நடைபாதையும் வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது.கொசுத்தொல்லையால் வால்பாறை மக்கள் அவதிப்படுவதை தடுக்க, நகராட்சி சார்பில் உடனடியாக கொசு மருந்து தெளிப்பதுடன், வழுக்கல் நிறைந்த நடைபாதையில் பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை