உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காருண்யா பல்கலையில் ரோபோடிக்ஸ் மாநாடு

காருண்யா பல்கலையில் ரோபோடிக்ஸ் மாநாடு

கோவை:காருண்யா நிகர்நிலை பல்கலையில், ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் எனும், சர்வதேச மாநாடு நடந்தது.ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் நுண்ணறிவு அமைப்புகளின் துறைகளில் உள்ள சவால்களை தீர்க்க, கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த மாநாடு நடத்தப்பட்டது.3டி பிரிண்டிங், மெக்கட்ரானிக்ஸ், இன்டெலிஜென்ட் சிஸ்டம்ஸ் போன்ற, பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடந்தன. 10 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார், 200 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இஸ்ரேல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி அவிட்டல் பெச்சார், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிர்வீச்சு பரிசோதனை துறை பேராசிரியர் ஜோசப் வின்ஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.'ரோபோட்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்மார்ட் வேலாண்மைக்கான ஏ.ஐ.,' 'அணுசக்தி களத்திற்கான மேம்பட்ட தொலைநிலை ஆய்வு அமைப்பு வளர்ச்சிகள்'ஆகிய தலைப்புகளில் விருந்தினர்கள் உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை