உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆத்துப்பாலம் பகுதியில் ரவுண்டானா அமைக்கணும்

ஆத்துப்பாலம் பகுதியில் ரவுண்டானா அமைக்கணும்

கோவை;ஆத்துப்பாலம் பகுதியில் ரவுண்டானா அமைக்குமாறு, மாநகர போலீஸ் கமிஷனரிடம் முறையிடப்பட்டுள்ளது.உக்கடம்-ஆத்துப்பாலம் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் என்பது பிரதான பிரச்னையாக உள்ளது. இந்நிலையில், நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஆத்துப்பாலம் பகுதியிலும், உக்கடம்-சுங்கம் பைபாஸ் ரோட்டிலும், ரவுண்டானாக்கள் அமைத்து தருமாறு த.மு.மு.க., மற்றும் ம.ம.க., நிர்வாகிகள், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமிப்பதுடன், காலை, 7:00 முதல், 10:00 மணி வரை, கழிவுநீர் வாகனங்களை நகரின் உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் முறையிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை