| ADDED : ஆக 03, 2024 10:02 PM
கோவை: ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த நபரின் முன்ஜாமின் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.பல்லடம் அருகேயுள்ள குப்புசாமி நாயுடுபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது நண்பரான, சித்தநாயக்கன் பாளையத்தில் வசிக்கும் பிரதீப்குமாரை, அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். இந்நிலையில், பிரதீப்குமாரும் இவரது நண்பர் ஆர்.எஸ்.புரம் விஜயகுமாரும் சேர்ந்து, கவுண்டம்பாளையம், கனரா வங்கியில், துரைராஜ் சொத்துக்களை அடமானம் வைத்து, ரூ.1.95 கோடி கடன் பெற்று கொடுத்தனர்.இந்த தொகையில், ஒரு கோடி ரூபாயை கடனாக தரும்படி பிரதீப்குமார், விஜயகுமார் கேட்டனர். வங்கியில் கடனை திருப்பி செலுத்தும் போது, வட்டியுடன் சேர்த்து தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பி இருவருக்கும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்.ஆனால், பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தனர். மாநகர குற்றப்பிரிவு போலீசில், புகார் அளித்ததை தொடர்ந்து, இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், முன்ஜாமின் கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் பிரதீப்குமார் மனு தாக்கல் செய்தார். மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.