உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விமானத்தில் அனுப்பிய பார்சல் மாயம்:பயணிக்கு ரூ.2.15 லட்சம் இழப்பீடு

விமானத்தில் அனுப்பிய பார்சல் மாயம்:பயணிக்கு ரூ.2.15 லட்சம் இழப்பீடு

கோவை;விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட பார்சல் மாயமானதால், பயணிக்கு, ரூ.2.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. கோவை, பா.நா.பாளையம், பாரதியார் ரோட்டில் வசித்து வரும் சீனிவாசன், இவரது மனைவி மைதிலி ஆகியோர், நியூசிலாந்தில் வசிக்கும் மகளை பார்க்க சென்றனர். இரண்டு மாதம் தங்கிய அவர்கள், 2022, டிச., 18ல், மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில், சென்னை திரும்பினர். கூடுதல் கட்டணம் செலுத்தி ஆறு பார்சல் அனுப்பியதில், சென்னைக்கு ஐந்து பார்சல் மட்டுமே வந்து சேர்ந்தது. ஒரு பார்சலில் அனுப்பிய சாக்லெட், துணிகள் உட்பட இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது. சென்னை, எக்மோரில் உள்ள ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் புகார் அளித்தும், தொலைந்து போன பார்சலை கண்டுபிடித்து தரவில்லை. இதனால், இழப்பீடு வழங்கக் கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைக்கு வந்த போது, மலேசியா ஏர்லைன்ஸ் தரப்பில் ஆஜராகி எந்த பதிலும் அளிக்கவில்லை. விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர்களின் பொருட்களின் இழப்பிற்கு, இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மன உளச்சலுக்கு இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி