| ADDED : ஜூன் 03, 2024 01:33 AM
கோவை;எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், ரூ.24 லட்சம் மோசடி செய்த பெண் ஊழியரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் சிவராம், 38. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவில், கோவை பன்னிமடையை சேர்ந்த கமலி, 32 என்பவர் பணிபுரிந்து வந்தார்.சமீபத்தில், நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்டன. அதில், கடந்தாண்டு, செப்., மாதம் முதல் நடப்பாண்டு, மே மாதம் வரையிலான காலத்தில் ரூ.11.11 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது.கமலி, மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. மோசடியை ஒத்துக் கொண்ட கமலி, கடந்த, 21ம் தேதி வரை ரூ.2.95 லட்சத்தை திருப்பி செலுத்தினார்.இந்நிலையில், நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை மேலும் சரிபார்த்த போது, கமலி, ரூ.24 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரிந்தது.இதுகுறித்து சிவராம், ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், கமலியை சிறையில் அடைத்தனர்.