உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சகோதயா பள்ளி ஜூடோ போட்டிகள் எஸ்.என்.வி., பள்ளி பதக்க வேட்டை

சகோதயா பள்ளி ஜூடோ போட்டிகள் எஸ்.என்.வி., பள்ளி பதக்க வேட்டை

கோவை,- சகோதயா பள்ளி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஜூடோ போட்டிகளில், எஸ்.என்.வி., குளோபல் பள்ளி பதக்கங்களை வென்றது.கோயம்புத்தூர் சகோதயா பள்ளி கூட்டமைப்பு சார்பில், ஜூடோ போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் பென்கலென் பப்ளிக் பள்ளியில் நடந்தன.இதில், எஸ்.என்.வி., குளோபல் பள்ளி மாணவர்கள் ஐந்து தங்கம், இரு வெண்கல பதக்கங்களை வென்றனர் .போட்டியில் பங்கு பெற்ற மாணவியர் அணியினர், ஒட்டுமொத்த ரன்னர் ரப் டிராபியை வென்றனர். பள்ளியின் சஞ்சய், அஸ்மிதா, ஷிபா, ராஷ்மிகா, சாய் ஹர்ஷா ஆகியோர் தங்க பதக்கங்களையும், ஹரின் மற்றும் யாழினி வெண்கல பதக்கங்களையும் வென்றனர்.இதே மாணவியர் அணி, கடந்த ஆண்டும், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.பள்ளி நிர்வாகத்தினர், வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை