உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கமம் கலைக்குழு ஒயிலாட்டம் அரங்கேற்றம்

சங்கமம் கலைக்குழு ஒயிலாட்டம் அரங்கேற்றம்

பெ.நா.பாளையம்;சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்ட அரங்கேற்றம் நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் ரோடு, ஸ்ரீராம் நகரில் நடந்தது. விழாவுக்கு சங்கமம் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமை வகித்தார். விழாவையொட்டி முதலில் இறை வணக்கம், தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, கலைஞர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தமிழ் தாய் வாழ்த்து மற்றும் வரவேற்பு நடந்தது. பின்னர், ஒயிலாட்ட உறுதிமொழி, ஒயிலாட்டம் அரங்கேற்ற நிகழ்வு நடந்தது. பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், சங்கமம் கலை குழுவின் கவுரவ ஆலோசகர் மயில்சாமி, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன், முன்னாள் தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை