உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 50 பவுன் தங்கம் திருடிய கடை ஊழியர் கைது

50 பவுன் தங்கம் திருடிய கடை ஊழியர் கைது

கோவை;நகைக்கடையில், 50 பவுன் தங்கம் திருடி சென்ற ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.கோவை சொக்கம்புதுாரை சேர்ந்த அருண்குமாரின் மனைவி ஸ்ரீதேவி, 44; இவர், ஆர்.எஸ்.புரம் வெங்கடாசலம் ரோடு பகுதியில், புதிதாக நகைக்கடை திறந்து நடத்தி வருகிறார். கடந்த, 25ம் தேதி காலை கடையை சுத்தம் செய்வதற்காக ஊழியர் முத்துக்குமார், நகை கடை மேலாளரிடம் சாவியை வாங்கிச் சென்றார். கடையை சுத்தம் செய்வது போல நடித்த அவர், அங்கிருந்த, 394 கிராம் எடையுள்ள (50 பவுன்), 122 தங்க நாணயங்களை திருடி சென்றார். இதையறிந்த ஸ்ரீதேவி, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன், மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை கைது செய்தனர். அடமானம் வைத்த சில தங்க நாணயங்களை தவிர்த்து, மீதமுள்ளவற்றை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை