உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழில் லைசென்ஸ் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்

தொழில் லைசென்ஸ் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்

அன்னுார்;'தொழில் செய்ய லைசென்ஸ் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்,' என பேரூராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் அளித்துள்ளது.அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 28 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். சிறிய, பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில் பல நிறுவனங்கள், வணிக கடை உரிமதாரர்கள், பேரூராட்சியில் தொழில் செய்ய லைசென்ஸ் பெறாமலும், தொழில்வரி செலுத்தாமலும் உள்ளனர்.இதுகுறித்து பேரூராட்சி ஊழியர்கள் நேரடியாக பலமுறை தெரிவித்தும் லைசென்ஸ் கட்டணம் செலுத்தவில்லை. தொழில்வரியும் செலுத்தவில்லை. எனவே இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற இரண்டு நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் லைசென்ஸ் கட்டணம் மற்றும் தொழில் வரி செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 5/ 1920ன் கீழ் தொழில் செய்ய லைசென்ஸ் பெறாமல் தொழில் நடத்தியதற்காக தங்களது நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்படும். இத்துடன் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கும் தொடரப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செயல் அலுவலர் கையொப்பமிட்ட நோட்டீசை அன்னுார் பேரூராட்சி மேற்பார்வையாளர் பிரதீப் குமார் மற்றும் ஊழியர்கள்,தொழில் நிறுவனங்களுக்கு வினியோகித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்