உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய விளையாட்டு; மாணவ, மாணவியர் அசத்தல்

குறுமைய விளையாட்டு; மாணவ, மாணவியர் அசத்தல்

பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், சிறுகளந்தை விக்னேஸ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. அதில், மாணவர்களுக்கான வளைப்பந்து (டென்னிகாய்ட்) போட்டி நடந்தது. பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. ஒற்றையர், இரட்டையர் போட்டிகளாக, 14, 17,19 என மூன்று பிரிவுகளாக நடைபெற்றன.14 வயது ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் கஞ்சம்பட்டி அரசு பள்ளி முதலிடம் பெற்றது. ஒற்றையர் பிரிவில், சுல்தான்பேட்டை வெங்கட்ராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், இரட்டையர் பிரிவில் சங்கவி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.17 வயது ஒற்றையர் பிரிவில், லட்சுமி நாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி.,பள்ளி முதலிடம் பெற்றது. இரட்டையர் பிரிவில், சுல்தான்பேட்டை வெங்கட்ராஜ் மெட்ரிக் பள்ளி முதலிடமும், ஒற்றையர் பிரிவில், இரண்டாமிடமும் பெற்றன. ஒற்றையர் பிரிவில், கஞ்சம்பட்டி இரண்டாமிடம் பெற்றது.19 வயது ஒற்றையர் பிரிவில், லட்சுமிநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி பழனிக்கவுண்டனுார் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. இரட்டையர் பிரிவில் சங்கவி பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி ஆதித்யா பள்ளி இரண்டாமிடமும் பெற்றது.* பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்றன.பெண்கள் பிரிவு: 14வயது ஒற்றையர் பிரிவில், லட்சுமிநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி முதலிடமும், இரட்டையர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றது. ஒற்றையர் பிரிவில், சூளேஸ்வரன்பட்டி குட்ெஷப்பர்டு பள்ளியும், இரட்டையர் பிரிவில் வடசித்துார் அரசுப்பள்ளி முதலிடமும் பெற்றன.17 வயது ஒற்றையர் பிரிவில், லட்சுமிநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி முதலிடமும், சூளேஸ்வரன்பட்டி குட்ெஷப்பர்டு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.இரட்டையர் பிரிவில், குட் ெஷப்பர்டு பள்ளி முதலிடமும், வடசித்துார் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.19வயது பிரிவில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் குட்ெஷப்பர்டு பள்ளி முதலிடம் பெற்றது. ஒற்றையர் பிரிவில், வடசித்துார் அரசுப்பள்ளியும், இரட்டையர் பிரிவில், பொள்ளாச்சி ஆதித்யா பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.ஆண்கள் பிரிவு: 14வயது ஒற்றையர் பிரிவில், லட்சுமிநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி விஸ்வதீப்தி பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. இரட்டையர் பிரிவில், கஞ்சம்பட்டி அரசுப்பள்ளி முதலிடமும், விஸ்வதீப்தி பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.17 வயது ஒற்றையர் பிரிவில், பொள்ளாச்சி விஸ்வதீப்தி பள்ளி முதலிடமும், சூளேஸ்வரன்பட்டி குட்ெஷப்பர்டு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. இரட்டையர் பிரிவில் விஸ்வதீப்தி பள்ளி முதலிடமும், வடசித்துார் அரசுப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.19 வயது ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், வடசித்துார் அரசுப்பள்ளி முதலிடம் பெற்றது. ஒற்றையர், இரட்டையர் பிரிவில் லட்சுமி நாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி இரண்டாமிடம் பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

உடுமலை

உடுமலை குறுமைய அளவில், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கிறது. நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாணவியருக்கான கபடி போட்டி நடந்தது.கபடி போட்டி: ஜூனியர் பிரிவு கபடியில், 5 அணிகள், சீனியர் பிரிவில், 5 அணிகள், சூப்பர் சீனியர் பிரிவில், 2 அணிகளும் பங்கேற்றன.இதில், ஜூனியர் பிரிவில், எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.சீனியர் பிரிவில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.சூப்பர் சீனியர் பிரிவில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றன.ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கான போட்டியில், 14 அணிகள் பங்கேற்றன. அதில் குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி முதலிடமும், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றுள்ளது.கூடைப்பந்து போட்டி: மாணவர்களுக்கான போட்டி, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் சீனிவாசா மெட்ரிக்பள்ளி அணிகள் முதலிடம் பெற்றன.சூப்பர் சீனியர் பிரிவில், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.ஜூனியர் பிரிவில், பெதப்பம்பட்டி என்.வி மெட்ரிக் பள்ளி அணி இரண்டாமிடம், சீனியர் பிரிவில், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், சூப்பர் - சீனியர் உடுமலை ஆர்.ஜி., எம் பள்ளி அணியும் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்றன.கைப்பந்து போட்டி: மாணவியருக்கான போட்டி, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ஜூனியர் பிரிவில், கொழுமம் ஓம்சக்தி மெட்ரிக் பள்ளி அணி முதலிடமும், உடுமலை சீனிவாசா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.சீனியர் பிரிவில், சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்திலும், ஓம் சக்தி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.சூப்பர் சீனியர் பிரிவில், பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளி முதலிடத்திலும், சீனிவாசா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.- நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி