உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுகதை தொகுப்பு நுால் வெளியீட்டு விழா

சிறுகதை தொகுப்பு நுால் வெளியீட்டு விழா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத் தலைவர் சண்முகம் எழுதிய இரண்டாவது சிறுகதை தொகுப்பு புத்தகம் வெளியீட்டு விழா, அரிமா சங்க கட்டடத்தில் நடந்தது. கவிஞர் செல்வராசு, அனைவரையும் வரவேற்றார்.கவிஞர் சிற்பி தலைமை வகித்து, 'தாயம்மா' என்னும் தலைப்பிலான புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை எழுத்தாளர் ரவிவாமனன் பெற்றுக் கொண்டார். புத்தக ஆசிரியர் சண்முகம் உடனிருந்தார்.கவிஞர்கள் சுடர்விழி பூபாலன், அறவொளி ரமேஷ், சென்னியப்பன், குமார், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் நசீர்அகமது, காளிமுத்து, தங்க சரவணன், ரவீந்திரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ