உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை தடை செய்ய முன்வர வேண்டும்

ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை தடை செய்ய முன்வர வேண்டும்

கோவை;தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில மாநாடு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில், மருந்துகள் கிடைக்க மத்திய அரசு முன் வர வேண்டும். ஒரே மூலக்கூறு அடங்கிய மருந்துகள், ஒரே விலையில் கிடைக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதன் பின், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில செயலாளர் செல்வன் கூறியதாவது:பல்வேறு வழிமுறைகளில் உள்ள ஜி.எஸ்.டி., விகிதங்களை, ஒரே வரி விகிதமாக மாற்றி, ஐந்து சதவீதம் என்ற அளவில் நிர்ணயிக்க வேண்டும். புற்றுநோய் மருந்துகளுக்கு, முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என்ற, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், கடை அடைப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். சில கார்ப்பரேட் நிறுவனங்கள், மருந்துகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. இது, மக்களின் உயிரோடு விளையாடும் செயல். அவர்கள் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வலி நிவாரணி மருந்துகளை, இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்துகின்றனர். மாநில அரசு தீவிரமாக கண்காணித்து, மருந்துச்சீட்டு இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், மொத்த மருந்து விற்பனையாளர்களிடம் இருந்து தான் வாங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் வாயிலாகவும், அண்டை மாநிலங்களில் இருந்தும் வாங்குகின்றனர். டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இன்றி, மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவை, கடுமையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் மனோகரன், பொருளாளர் ரமேஷ், மாவட்டத் தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ