சூலுார் : சூலுார் தாலுகாவில், உள்ள, கிராம நிர்வாக அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சூலூர் தாலுகாவில், கருமத்தம்பட்டி, சூலூர், செலக்கரச்சல், வாரப்பட்டி உள்ளிட்ட நான்கு உள்வட்டங்களில், 41 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பதுவம்பள்ளிக்கு செல்வி, காடுவெட்டிபாளையத்துக்கு ஆனந்தி, மோப்பிரிபாளையத்துக்கு தேவசேனா, எம்.பாப்பம்பட்டிக்கு கவிதா, கிட்டாம்பாளையத்துக்கு சாந்தி, கருமத்தம்பட்டிக்கு முருகேசன், சோமனூருக்கு ராஜேஷ் கண்ணன், செம்முண்டாம்பாளையத்துக்கு ஆரோக்கிய பிரின்ஸ், கரவழி மாதப்பூருக்கு துர்கா, கணியூருக்கு வெங்கடேசன், அரசூருக்கு குமார், ஊத்துப்பாளையத்துக்கு நவீன் குமார், நீலம்பூருக்கு அசோகன், குரும்பபாளையத்துக்கு சத்தியபாமா, மைலம்பட்டிக்கு கார்த்திகேயனும், ராசிபாளையத்துக்கு சுஜி, இருகூருக்கு உதயராணி, ஒட்டர்பாளையத்துக்கு ராஜேந்திரன், பட்டணம் லேகநாயகி, பீடம்பள்ளிக்கு பன்னீர் செல்வம், கண்ணம்பாளையம் உதயகுமாரும், கலங்கலுக்கு, முத்துராஜ் பாண்டியனும் வி.ஏ.ஓ.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கயம்பாளையத்துக்கு சபரிநாதன், சூலூருக்கு பஞ்சவர்ணம், காடாம்பாடிக்கு ராமசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், அப்பநாயக்ஙன்பட்டிக்கு, மீனாட்சி, பாப்பம்பட்டிக்கு ஏசுமணி, கள்ளப் பாளையத்துக்கு ஜெயக்குமார், இடையர்பாளையத்துக்கு அன்னக்கொடியும் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளனர்.