உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்வி நிறுவனங்களுடன் சிறுதுளி ஒப்பந்தம் 

கல்வி நிறுவனங்களுடன் சிறுதுளி ஒப்பந்தம் 

கோவை:கோவையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த, சிறுதுளி முக்கிய கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.சிறுதுளி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதோடு, பல்வேறு கல்லுாரிகளுடன் சேர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி, கே.பி.ஆர்., இன்ஜி., தொழிநுட்பக் கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இந்நிகழ்ச்சியில், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், அறங்காவலர் சதீஷ், கல்லுாரி முதல்வர்கள் சித்ரா, பாலகிருஷ்ணன், சரவணன், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி