| ADDED : ஆக 07, 2024 10:58 PM
வால்பாறை : வால்பாறையில் பருவமழைக்கு பின், வனவளம் பசுமையாக காணப்படுவதால், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், வில்லோனி நெடுங்குன்று செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த ரவி, 54, என்பவர் கடந்த மே மாதம், 8ம் தேதி இரவு வீட்டிற்கு நடந்து சென்ற போது, யானை தாக்கி பரிதாபமாக இறந்தார்.இதனையடுத்து, வனத்துறை சார்பில் இந்தப்பகுதியில் ரோடு, நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்து தர வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ்தேஜா, வில்லோனி செட்டில்மென்ட் குடியிருப்பு பகுதிக்கு செல்ல ரோடு போடுவதற்காக ஆய்வு செய்த பின் பழங்குடியின மக்களிடம் பேசியதாவது:மனித-வனவிலங்கு மோதலை தவிர்க்க, பழங்குடியின மக்கள் இரவு நேரத்தில் குறுக்கு வழித்தடத்தில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில், மனித -- வனவிலங்கு மோதலை தடுக்க 'ஸ்மார்ட் வீர்ச்சுவல் வேலி' அமைக்கப்பட்டுள்ளன. இரு வனச்சரகங்களிலும் யானைகள் அதிக அளவில் வருவதால், இரவு நேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு, பேசினார்.ஆய்வின் போது வனச்சரக அலுவலர்கள் வெங்கடேஷ், கிரிதரன் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.