உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்வமுடன் மரக்கன்று நட்ட ராணுவ வீரர்கள்

ஆர்வமுடன் மரக்கன்று நட்ட ராணுவ வீரர்கள்

கோவை : உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று, மெட்ராஸ் ரெஜிமென்ட் 110 பிரதேச ராணுவப்படை யூனிட் வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன.உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பல்வேறு அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டதுடன், பொது மக்களுக்கு சூழல் பாதுகாப்பு சார்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், மெட்ராஸ் ரெஜிமென்ட் 110 பிரதேச ராணுவப்படை சார்பில் புலியகுளத்தில் உள்ள யூனிட் வளாகத்தில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினர், 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்தனர்.அப்போது, கமாண்டிங் அதிகாரி விக்ரம் சிங் யாதவ் பேசுகையில், ''1974ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் சார்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, மரக்கன்று நட்டு வருகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி