உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை இன்று சிறப்பு வழிகாட்டுதல் முகாம்

மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை இன்று சிறப்பு வழிகாட்டுதல் முகாம்

உடுமலை : பிளஸ் 2 முடித்து, உயர்கல்விக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் முகாம், திருப்பூரில் நடக்கிறது.பிளஸ் 2 முடித்து தனியார் கல்லுாரியில் சேர விண்ணப்பித்து இடம் கிடைக்காத மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான சிறப்பு முகாம், இன்று முதல் 16ம் தேதி வரை, மாவட்ட நிர்வாகத்தின் உயர்கல்வி வழிகாட்டுதல் உதவி மையத்தில் நடக்கிறது.இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 முடித்த 23 ஆயிரத்து 500 மாணவர்கள், நுாறு சதவீதம் உயர்கல்வி சேர்க்கை பதிவு செய்வதற்கு, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.அதன் அடிப்படையில், ஜூன் மாதம் நடந்த முதற்கட்ட சிறப்பு வழிகாட்டுதல் முகாமில், 200 மாணவர்களுக்கு கல்லுாரிகளில் நேரடி சேர்க்கை செய்யப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டமாக தனியார் கல்லுாரிகள், பாலிடெக்னிக், நர்சிங் கல்லுாரி உள்ளிட்ட நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கான சிறப்பு முகாம் இன்று (13ம் தேதி) முதல் 16ம் தேதி வரை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மாவட்ட நிர்வாகத்தின் உயர்கல்வி வழிகாட்டுதல் உதவி மையத்தில் நடக்கிறது. மாணவர்கள் இந்த மையத்தை அணுகி, தங்கள் சேர விரும்பும் கல்லுாரியில் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து சேரலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி