'கே.எம்.சி.எச்., சார்பில் வரும் 29 ம் தேதி வரை நடக்கும் முழு உடல் பரிசோதனை முகாமில், 35 வயதுக்கு மேற்பட்ட, தம்பதிகளுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மைய டாக்டர் ஜோசப் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது:நோய் உள்ளதா என அறிய விரும்புவோர், புகை, மது பழக்கம் உள்ளோர், சர்க்கரை பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமின்றி, 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இப்பரிசோதனை வாயிலாக ஆரம்ப நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை கண்டறிந்து உரிய சிகிச்சை பெறலாம். பரிசோதனை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டு, அன்றே பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது.இதில் சிறுநீர், ரத்தம், மலம், மார்பக எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம், காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனைகள், ஆஞ்சியோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கு மேமோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.ரத்த பரிசோதனையில் ரத்த சோகை, ரத்த புற்றுநோய், நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு கண்டறிவதன் வாயிலாக, இருதய செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதையும்; எக்ஸ்ரே, சி.டி.,ஸ்கேன் மற்றும் நுரையீரல் பரிசோதனை வாயிலாக நுரையீரல் தொற்று புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்புகளையும், சர்க்கரை பரிசோதனையில் நீரிழிவையும், இ.சி.ஜி., டி.எம்.டி., மற்றும் ஆஞ்சியோ வாயிலாக மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதா என்பதையும் கண்டறியலாம்.அவிநாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச்.,; ராம் நகரில் உள்ள கே.எம்.சி.எச்., சிட்டி சென்டர்; சூலுாரில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல் வரும் 29ம் தேதி வரை, ஞாயிறு தவிர பிறநாட்களில் முழு உடல் பரிசோதனை முகாம் நடக்கிறது. 35 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு கட்டணத்தில், 20 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, 97901 97971 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.