உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில அளவிலான பயிற்சியாளர் கருத்தரங்கம்

மாநில அளவிலான பயிற்சியாளர் கருத்தரங்கம்

- நமது நிருபர் -திருப்பூர், தாராபுரம் ரோடு, டி.ஜே., பூங்காவில், ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில், மாநில அளவிலான பயிற்சியாளர் கருத்தரங்கம் துவங்கியது.திருப்பூர் மைய ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷவர்தன் குப்தா வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் 'குறிக்கோளும், கடமைகளும்' எனும் தலைப்பில், கருத்தரங்கை துவங்கி வைத்து பேசினார்.மாநிலம் முழுதும் இயங்கும், 400 ஹார்ட்புல்னெஸ் மையங்கள், 38 மாவட்டங்களை உள்ளடக்கி, 15 மண்டலங்களில் இருந்து, 600-க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள், 1,500 பயிற்சியாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். மூத்த பயிற்சியாளர், முன்னாள் இணைச் செயலாளர் பிரகாஷ் பேசினார்.தமிழகம், புதுச்சேரியில் வசிக்கும், 15 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி கற்றுக்கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி