உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில ரோல்பால் போட்டி; கோவை மாவட்டம் சாம்பியன்

மாநில ரோல்பால் போட்டி; கோவை மாவட்டம் சாம்பியன்

கோவை: மாநில அளவிலான ரோல்பால் போட்டியின் ஆண்கள் மற்றும் பெண்கள் என, இரு பிரிவுகளிலும், கோவை மாவட்ட அணி சாம்பியன் கோப்பையை வென்றது.தமிழ்நாடு ரோல்பால் சங்கம், கோவை மாவட்ட ரோல்பால் சங்கம் சார்பில் 12வது சீனியர் தமிழ்நாடு மாநில ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, திருச்சி ரோடு வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத்தில் நடந்தது.இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று போட்டியிட்டன.இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், கோவை அணி 7 - 4 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் மாவட்ட அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், கோவை அணி 12 - 0 என்ற கோல் கணக்கில் திருச்சியை வீழ்த்தி கோப்பையை வென்றது.வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனையினரை தென்னிந்திய ரோல்பால் சங்க செயலாளர் சுப்ரமணியம், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், துணை தலைவர் பிரேம்நாத், பயிற்சியாளர் ராஜசேகர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி