உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்

உடுமலை;-----திருப்பூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களில், 250 கோழிகளுடன் கூடிய சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை நிறுவுவதற்கு தேவையான, கோழிக் கொட்டகை கட்டுமானச்செலவு, தீவனத்தட்டு, தண்ணீர் வைக்கும் தட்டு உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும், 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு என, 50 சதவீதம் மானியமாக, ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 875 ரூபாய் வழங்கப்படுகிறது.மீதம் உள்ள தொகையை, பயனாளி செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும், 250 எண்ணிக்கையிலான, 4 வார வளர்ந்த நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம், 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்; குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயன்பெற விரும்புவோர், ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீதம் மானியத்தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், மூன்று ஆண்டுகள் பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகிய ஆவணங்களுடன், தங்களுக்கு அருகாமையிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம், என -----திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை