உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பைக்கு தீ வைப்பு துர்நாற்றத்தால் அவதி

குப்பைக்கு தீ வைப்பு துர்நாற்றத்தால் அவதி

நெகமம் : நெகமம், கோப்பனூர்புதூரில் ரோட்டோரத்தில் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.நெகமம், கோப்பனூர்புதூர் வழித்தடத்தில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக வாகனங்களில் செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுகிறது.குப்பைக்கு அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால், அதிக அளவு புகை உண்டாகிறது. இதனால் ரோட்டில் பயணிப்போர் மூச்சுதிணறலால் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயம் அதிகம் ஏற்படுகிறது. குப்பை கொட்டும் இடத்தின் அருகே, விவசாய நிலம் இருப்பதால் விவசாயிகளும் பாதிக்கின்றனர்.இதை தவிர்க்க, ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை முறையாக கடைபிடிக்கிறார்களா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ரோட்டின் ஓரத்தில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மாற்று இடம் தேர்வு செய்து குப்பை கொட்ட வேண்டும். இதற்கு, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை