| ADDED : ஜூலை 29, 2024 02:18 AM
கோவை:கோவை புத்தகத்திருவிழாவில், அறிவுக்கேணி மற்றும் ஓசை சூழல் அமைப்பு சார்பில் நடந்த சூழலியல் கருத்தரங்கு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.கருத்தரங்கில், கவிஞர் அறிவுமதிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. கவிஞர் அறிவுமதி பேசுகையில், ''தமிழர்கள் தாய்மை உணர்வுடன் இருந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய சொற்களே உதாரணம். தமிழை உணர்வுப்பூர்வமாக உள்வாங்கினால் மட்டுமே தமிழர்களாகமாற முடியும்.'' அனைத்து உயிர்களும் நம் உறவுகள் என, சிந்திப்பது தமிழ் சமூகம்,'' என்றார்.முன்னதாக, கவிஞர் அவைநாயகம் வரவேற்றார். தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜியோ டாமின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.