மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
18 hour(s) ago
நாளைய மின்தடை
18 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
18 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
18 hour(s) ago
கோவை:கோவையில், 39 டிகிரிக்கு மேல் அதாவது, 102 டிகிரிக்கு மேல் வரும் ஐந்து நாட்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அதன்படி, பகல் பொழுதில் 38-39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், இரவு நேரத்தில் 25-26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.காலை நேரத்தில், 80 சதவீதமும், மாலை பொழுதில் 20 சதவீதமாகவும், காற்றின் ஈரப்பதம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பம் அதிகரித்து வருவதால், 13, 14 ஆகிய நாட்களில் லேசான துாறல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி, கோடை உழவுக்கு விவசாயிகள் நிலத்தை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக, கால்நடைகளுக்கு வெப்ப அழற்சி வர வாய்ப்புள்ளதால், கால்நடை, கோழிகளுக்கு போதுமான மற்றும் சுத்தமான தண்ணீரை கொடுக்க வேண்டும்.கால்நடை குடில்களை சுற்றிலும், ஈரமான சாக்குகளை தொங்கவிடவும், வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago