உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிநாட்டு பயணிகள் வருகை உஷார் நிலையில் விமான நிலையம்

வெளிநாட்டு பயணிகள் வருகை உஷார் நிலையில் விமான நிலையம்

கோவை;வெளிநாடுகளிலிருந்து வரும் விமான நிலையத்தில், உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் கோவையில் அனுமதிக்கப்படுகின்றனர்.சர்வதேச விமான நிலையமாக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ள கோவை விமான நிலையத்திற்கு இரண்டுவெளிநாடுகளிலிருந்து மட்டுமே விமானங்கள் வந்து செல்கின்றன. ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானமும், சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானமும் வந்து செல்கின்றன. சிங்கப்பூரில் சமீபத்தில் கொரோனா தொற்று பரவி வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, வெளிநாட்டிலிருந்து கோவை வரும் விமான பயணிகளுக்கு, காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிந்து அனுமதிக்கின்றனர். இதற்கென தானியங்கி கருவியும் பொருத்தியுள்ளனர்.விமான நிலையத்தில் தனி அறையும், ஆம்புலன்ஸ்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விமானநிலையத்தில் துாய்மை பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ