உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்க தேர் நிறுத்தும் மண்டபம்; கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

தங்க தேர் நிறுத்தும் மண்டபம்; கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் தங்க தேர் நிறுத்தும் மண்டப கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.கோவை மாவட்டம் காரமடையில் உள்ள, அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோவிலில் உபயதாரர்களால், தங்கத்தேர் அமைக்கும் பணிக்கு அனுமதி வாங்கி, தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தேருக்கு, தங்க தகடு பதிக்கும் வேலைப்பாட்டிற்காக கும்பகோணம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், தங்கத்தேர் நிறுத்துவதற்கு கோவிலில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் கல் மண்டபம் அமைக்கும் பணி, சிற்ப வேலைப்பாடுகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி