| ADDED : ஜூலை 08, 2024 11:07 PM
கோவை;தமிழ்நாடு காதுகேளாதோர் பிரீமியர் லீக் (டி.டி.பி.எல்.,) திட்டமிடல் கூட்டம், கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் பத்மாவதி ஹாலில் நடந்தது.இக்கூட்டத்தில், தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், டெப் லீடர்ஸ் அறக்கட்டளையின் இயக்குனர் முரளி, புகழ்பெற்ற சமூக சேவகர் டாக்டர் டார்வின் மோசஸ் உட்பட, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.தமிழகம் முழுவதிலும் உள்ள, 30 முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் ஒன்றிணைக்கப்பட்டனர். அவர்களுடன், டி.டி.பி.எல்., சீசன் குறித்து விவாதிக்கப்பட்டு, வியூகம் வகுக்கப்பட்டது. சில்கால் அறக்கட்டளை, இந்த முயற்சிக்கு ஆதரவளித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'தமிழ்நாடு காது கேளாதோர் பிரீமியர் லீக் போட்டி விரைவில் நடத்தப்பட உள்ளது. டி.டி.பி.எல்., காது கேளாத விளையாட்டுவீரர்களுக்கு, ஒரு மாற்று தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இது வீரர்களின் சிறப்பையும், சமூக உணர்வையும் வளர்க்கிறது. வரவிருக்கும் ஒரு உற்சாகமான நாளுக்காக, நாங்கள் காத்திருக்கிறோம்' என்றனர்.