உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட விளையாட்டு போட்டிகள் இம்மாத இறுதியில் துவங்க திட்டம்

மாவட்ட விளையாட்டு போட்டிகள் இம்மாத இறுதியில் துவங்க திட்டம்

கோவை : பள்ளிக்கல்வித்துறையின் குறுமைய, மாவட்ட விளையாட்டு போட்டிகளை, ஜூலை இறுதியில் துவங்க முடிவெடுக்கப்பட்டது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. இதில், குறுமையம், மாவட்டம், மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.மேலும், இந்தாண்டுக்கான போட்டிகள் நடத்த ஆயத்த பொதுக்குழு கூட்டம், சொக்கம்புதுார் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் நடந்தது.கூட்டத்தில், கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள, 10 குறுமையங்களில், குறுமைய போட்டிகளை எடுத்து நடத்தும் பள்ளிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.மேலும், மாவட்ட அளவிலான போட்டியை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி சார்பில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.இம்மாதம் கடைசி வாரத்தில், போட்டிகளை துவங்க திட்டமிடப்பட்டது. போட்டிக்கான இடம், தேதி குறித்து முடிவு செய்ய ஜூலை, 19ம் தேதி கூட்டம் நடக்கிறது.இக்கூட்டத்தில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், மூத்த உடற்கல்வி ஆசிரியர் வெள்ளியங்கிரி, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி முதல்வர் சபுரால் பானு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ