உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடைமேம்பாலம் மக்கள் எதிர்பார்ப்பு

நடைமேம்பாலம் மக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில் பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப, சாலை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.நடைபாதைகளே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுதவிர, 'நோ பார்க்கிங்' என, போக்குவரத்து போலீசார் வரையறுத்த இடங்களிலும், வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுகின்றன.குறிப்பாக, தேர்முட்டி, காந்திசிலை, அரசு மருத்துவமனை எதிரே, சாலையை கடக்க முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். இதனால், இடையூறு இல்லாமல் சாலையை கடந்து செல்ல நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை