உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்வாயில் சிக்கி தவித்த குட்டியானை: வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்ப்பு

கால்வாயில் சிக்கி தவித்த குட்டியானை: வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்ப்பு

கூடலுார் : முதுமலை அப்பர் கார்குடி அருகே, கால்வாயில் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்த, குட்டி யானையை வனத் துறையினர் மீட்டு தாயிடம் சேர்த்தனர்.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அப்பர் கார்குடி அருகே, பிறந்து சில நாட்களான குட்டி யானை நேற்று (ஜூன் 23) தாயுடன் உலா வந்தது. பிற்பகல் குட்டி யானை, எதிர்பாராமல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து, வெளியே வர முடியாமல் தவித்தது. தாய் யானை பிளிறியபடி அதனை மீட்க போராடியது.தகவல் அறிந்த வனச்சரகர் விஜய், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதிக்கு சென்று, தாய் யானையை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து, குட்டி யானை கால்வாயில் இருந்து, இரண்டு மணிநேரம் போராடி மீட்டு, தாய் யானையுடன் சேர்த்தனர். தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத் துறையினர் கூறுகையில், 'குட்டி யானையை கால்வாயில் இருந்து பாதுகாப்பாக மீட்டு, தாயுடன் சேர்த்து கண்காணித்து வருகிறோம். குட்டிக்கு எந்த பாதிப்பும் இல்லை; நல்ல நிலையில் உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JeevaKiran
ஜூன் 24, 2024 13:07

மலை பிரதேசங்களில் விவசாயம் நடைபெறவில்லை என்றால், அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக்கொண்டு காடுகளாக மாற்றானும். அதைவிட்டுவிட்டு அந்த இடத்தில் வீடோ அல்லது வணிக செயல்களுக்கு ஒரு போதும் அனுமதி தரக்கூடாது.


mindum vasantham
ஜூன் 24, 2024 09:44

மாஞ்சோலை எஸ்டேட்களை காடுகளாக மாற்றுவது போல நெறய எஸ்டேட்கள மாற்றுங்கள்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ