| ADDED : ஆக 17, 2024 11:11 PM
கோவை:கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக, அசோக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக இருந்த, ரோஹித் நாதன் ராஜகோபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய போக்குவரத்து துணை கமிஷனராக, கடலூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி., யாக இருந்த அசோக்குமார் நியமிக்கப்பட்டார். அவர் கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகத்தில், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.அவர் கூறுகையில், ''விபத்து இல்லாத கோவையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகரில் காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க, பொதுமக்களிடம் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.