மேலும் செய்திகள்
லீமெரிடியனில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம்
27 minutes ago
சிறப்பு தள்ளுபடிகளுடன் கேரளா பர்னிச்சர் மேளா
28 minutes ago
ஆறாவது நாளாக நர்ஸ்கள் போராட்டம்
29 minutes ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் பெய்த கோடை மழையால், கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், அதிகப்படியான விவசாயிகள் கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாடுகளுக்கு பசும்புல் தீவனம் அதிகம் கிடைப்பதால் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.இருப்பினும், கடந்த பிப்., மார்ச், ஏப்., மற்றும் மே மாதங்களில் நிலவிய வெயிலின் தாக்கம் காரணமாக, கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பலத்த கோடை மழை நீடித்தது. இதனால், நிலப்பகுதிகளில், புற்களின் வளர்ச்சி அதிகரித்து காணப்படுகிறது. கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம் கிடைக்கப் பெற்றும் வருகிறது.
27 minutes ago
28 minutes ago
29 minutes ago