உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா மறைத்து வைத்தவர் கைது

கஞ்சா மறைத்து வைத்தவர் கைது

வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில், சட்டவிரோதமாக விற்பனைக்காக, கஞ்சாவை மறைத்து வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, மருதமலை அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், சட்டவிரோதமாக கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., சிலம்பரசன் தலைமையிலான போலீசார், மருதமலை அடிவாரம் லெப்ரசி காலனியில் உள்ள தங்கமணி,29 என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில், விற்பனை செய்வதற்காக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதில், மேலும் தொடர்புடைய தினேஷ் மற்றும் ஜோதி ஆகிய இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை