உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீயில் கருகி மூதாட்டி பலி

தீயில் கருகி மூதாட்டி பலி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள், 89. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர் தனியாக வசித்து வந்தார். இவரது முதல் மகன் சிவராஜ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன், உடல் நிலை பாதித்து இறந்தார். அதன்பின், மனஉளைச்சலில் இருந்த பொன்னம்மாள், வீட்டில் இரவு நேரத்தில் மண்ணெண்ணை ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார்.அருகில் வசிப்பவர்கள், பொன்னம்மாள் வீட்டில் புகை வருவதை கண்டு, வீட்டை திறந்து பார்த்த போது தீயில் கருகிய நிலையில், பொன்னம்மாள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி