உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாரக்கணக்கில் வீணாகும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர்

வாரக்கணக்கில் வீணாகும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர்

அன்னூர்:அன்னூரில் குடிநீர் குழாய் உடைப்பால், பல ஆயிரம் லிட்டர் நீர் தினமும் வீணாகிறது.அன்னூர் பேரூராட்சியில், கூட்டு குடிநீர் திட்டத்தில் வீட்டு இணைப்பு மற்றும் பொது குழாய்களில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் பிரதான குழாய் மற்றும் கிளைக் குழாய்கள் பல கி.மீ., தூரத்திற்கு பதிக்கப்பட்டுள்ளன.அன்னூரில், ஓதிமலை சாலையில், மன்னீஸ்வரர் கோவில் முன்புறம், குழாய் உடைப்பு ஏற்பட்டு வாரக்கணக்கில் பல ஆயிரம் லிட்டர் நீர் வீணாக சாக்கடையில் செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை