உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்

மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்

போத்தனூர்:மதுக்கரை சின்னைய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஷைலஜா, 38; காந்திபுரத்திலுள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, மரக்கடை பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார். அங்கிருந்து குனியமுத்தூருக்கு (தடம் எண்: 4 ஜெ) பஸ்சில் பயணித்தார். பஸ் குனியமுத்தூரை வந்தடைந்தபோது, கீழே இறங்க முற்பட்ட ஷைலஜா, தான் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கத்தாலி செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவரது புகாரின்பேரில், குனியமுத்தூர் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை