| ADDED : ஜூன் 18, 2024 10:31 PM
கருமத்தம்பட்டி:கணியூரில் கஞ்சா விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.கணியூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக, கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்த மூவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கஞ்சா பொட்டலங்களை விற்பது தெரிந்தது. திருச்சூரை சேர்ந்தமணிகண்டன், 23, தேனி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், 20, கருமத்தம்பட்டியை சேர்ந்த சந்தோஷ்குமார், 25 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1 கிலோ, 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.