உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறில் திரண்ட சுற்றுலாப்பயணியர்

ஆழியாறில் திரண்ட சுற்றுலாப்பயணியர்

பொள்ளாச்சி;பொள்ளாச்சியை அடுத்துள்ள சுற்றுலாத் தலங்களில், சுற்றுலாப்பயணியர் வருகை அதிகரித்துள்ளது.பொள்ளாச்சியை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில், முக்கிய சுற்றுலா தலங்களாக ஆழியாறு அணை, பூங்கா, ஆற்றுப்படுகை மற்றும் கவியருவி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், இங்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணியர் வருகை புரிகின்றனர்.அவ்வகையில், நேற்று, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் குடும்பத்துடன் பொழுதை கழிக்க, நேற்று ஆழியாறு அணைக்கு வந்தனர்.இதனால், அப்பகுதியில், வாகன நெரிசல் அதிகரித்தது. பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதியில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.மழையின் தாக்கம் குறைந்து, குளிரான சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலாப் பயணியர், மலையின் அழகை கண்டு ரசித்தனர். அணைக்கட்டின் மீது நடக்க மக்கள் ஆர்வம் காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ