உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டவுன் அண்டு சிட்டி டெவலப்பர்ஸ் புதிய திட்டங்கள் அறிமுகம்

டவுன் அண்டு சிட்டி டெவலப்பர்ஸ் புதிய திட்டங்கள் அறிமுகம்

கோவை;டவுன் அண்டு சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில், கோவையில் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாக தேவைகளுக்காக புதிய கட்டுமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா, சீனியர் துணைதலைவர் சுரேஷ்குமார் கூறியதாவது:சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் அருகில் சிக்நேச்சர் சிட்டி, கணபதி அருகில் எலீட் சிட்டி, டைடல்பார்க் அருகில் ஐகான் சிட்டி, ேஹாப்ஸ் பகுதியில் மெகா சிட்டி என, அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்துள்ளோம்; நல்ல வரவேற்புள்ளது.காளப்பட்டி நேரு நகர், கொடிசியா மற்றும் பீளமேடு அருகில் வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட உள்ளோம். எங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.29.99 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இடங்களுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கும். மெகா சிட்டியில் ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை வீடுகள் உள்ளன.தேசிய மயமாக்கப்பட்ட 8 வங்கிகள் வாயிலாக கடன் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கிறோம். 1 பெட்ரூம், ஹால், சிச்சன் குடியிருப்புகளுக்கு, 90 சதவீதம் வரையும், 2 பெட்ரூம், ஹால், கிச்சன் குடியிருப்புகளுக்கு 80 சதவீதம் வரையும் கடன் உதவி கிடைக்கும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sangarapandi
ஜூன் 17, 2024 09:16

கோவை மாநகராட்சி பகுதிகளில் கழிவு நீர் சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணி கடந்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் கண்காணிப்பில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கழிவு நீர் செல்லும் வழிகளின் குறுக்கே செல்லும் குழாய்களால் பிளாஸ்டிக் கழிவுகள் தடைபட்டு நிற்பதால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நிதாந்தர தீர்வாக இனி வரும் காலங்களில் கழிவு நீர் சாக்கடைகளின் குறுக்காக எந்த குழாய்களையும் பாதிக்காமல் சாக்கடைகளுக்கு அடியில் செல்லுமாறு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை