உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் -- ஊட்டி சாலையில் கல்லார் மற்றும் பர்லியாருக்கு இடையில் உள்ள இரும்பு பாலம் அருகே மரம் விழுந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் -- ஊட்டி சாலையில், பர்லியார் வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள், கர்நாடகா, கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து காய்கறி லோடு வண்டிகள் என ஏராளமான வாகனங்கள் மேட்டுப்பாளையம்- - ஊட்டி சாலையில் பயணிக்கின்றன. இச்சாலையோரம் உள்ள பழமையான மரங்களில் சில மரங்கள் வலுவடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனிடையே நேற்று கல்லார் மற்றும் பர்லியாருக்கு இடையில் உள்ள இரும்பு பாலம் அருகே பழமையான மரம் விழுந்தது. இதனால் இரும்பு பாலத்தில் ஊட்டியில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம் செல்ல முடிந்தது.ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரம் காத்திருத்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மரத்தை கட்டர் இயந்திரம் வாயிலாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ