உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுப்பதிவு குறித்து 16,703 பேருக்கு பயிற்சி! மாதிரி மையத்தை பார்வையிட்டார் கோவை கலெக்டர்

ஓட்டுப்பதிவு குறித்து 16,703 பேருக்கு பயிற்சி! மாதிரி மையத்தை பார்வையிட்டார் கோவை கலெக்டர்

கோவை;கோவை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு மேற்கொள்வது தொடர்பாக, 16 ஆயிரத்து 703 பேருக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளுக்கு, 3096 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது.இது தொடர்பாக, 10 சட்டமன்றத் தொகுதிகளின் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்காக நடந்த இந்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு, இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்கள்-1 ஆகியோருக்கு காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் 2 மற்றும் 3 ஆகியோருக்கு மதியம் 2:00 முதல் 5:00 மணி வரையும், இரண்டு கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.இவற்றில், 3779 ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், 12,294 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 16,073 பேர் பயிற்சி பெற்றனர்.கோவை நிர்மலா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய இடங்களில் நடந்த பயிற்சியையும், அங்கு அமைக்கப்பட்டிந்த மாதிரி ஓட்டுச்சாவடி மையத்தையும் கலெக்டர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு செயல் விளக்கம்

பயிற்சி வகுப்பில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்த விளக்கம், மாஸ்டர் கவரில் உள்ள மிக முக்கியமான படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கான வழி காட்டுதல், ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பின்பு மண்டல அலுவலர்கள், ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டியவை, ஓட்டுப்பதிவு கண்காணிப்பு செயலி குறித்த விளக்கம் உள்ளிட்டவை குறித்து, அனைவருக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்