உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான் முதல்வன் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி 

நான் முதல்வன் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி 

கோவை;நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்தாண்டு முதல் அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும், 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும், தொழில்துறை நிறுவனங்களின் தேவைக்கு ஏற்பவும் நான் முதல்வன் திட்டத்தில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு டிஜிட்டல் ஸ்கில், ஏ.ஆர்., வி.ஆர்.,ஐ.ஓ.டி., இண்டஸ்ட்ரியல் மெட்டாவெர்ஸ், பிரிண்ட் சர்குயூட் போர்டு டிசைன் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் துறை வாரியாக, மூன்றாம், நான்காம் பருவ மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் கூறுகையில், ''நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு துறைவாரியாக பாடங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி, தொழில்நுட்ப வல்லுநர்களால் அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில், ஆசிரியர்கள் மட்டுமின்றி தொழில்துறை வல்லுநர்களும், நேரடியாக கல்லுாரிக்கு வந்து கற்பிக்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை