உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யூனியன் பேங்க் ஆப் இந்தியா வீடு, கார் கடன் மேளா துவக்கம்

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வீடு, கார் கடன் மேளா துவக்கம்

கோவை;யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில், வீடு மற்றும் கார் கடன் மேளா இரண்டு நாள் கண்காட்சி, பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வளர்ச்சி) கூடுதல் கலெக்டர் ஸ்வேதா சுமன், கண்காட்சியை துவக்கிவைத்தார். இக்கண்காட்சியில், வீட்டுமனைகள், பட்ஜெட் வீடுகள், பண்ணை வீடுகள், சொகுசு வீடுகள், அபார்ட்மென்ட், கார்கள் வாங்க குறைந்த வட்டி விகிதத்தில், உடனடி கடன் ஒப்புதல் கிடைக்கிறது. இதற்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற வங்கிகளின் கடனை மாற்றவும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வழிவகை செய்துள்ளது. கண்காட்சியில் இன்று மாலை, 4:00 மணிக்கு மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்படுகிறது; இதற்கான அனுமதி இலவசம். யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல துணை பொது மேலாளர் லாவண்யா கூறுகையில், ''8.30 சதவீத வட்டியில், கடன் வழங்குகிறோம். வீடு கட்டும் எண்ணம் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், '' என்றார். உதவி பொது மேலாளர் முருகானந்தம், ஆ.வி.எஸ்., கல்விக் குழுமங்களின் ஆலோசகர் பத்ரி, தியா பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ